100 டன் ஊட்டச்சத்து உணவுகளை அனுப்பிவைத்தது தெலுங்கானா

100 டன் ஊட்டச்சத்து உணவுகளை அனுப்பிவைத்தது தெலுங்கானா

1 mins read

ஹைதராபாத்: கேரளாவில் மழையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 100 டன் ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகளை தெலுங்கானா நேற்று அனுப்பிவைத்தது. கேரளாவில் மழையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 100 டன் ஊட்டச்சத்து 'பாலாம்ருதம்' உணவு பாக்கெட்டு களை தெலுங்கானா அரசு நேற்று அனுப்பிவைத்தது. தெலுங் கானா அரசின் கீழ் இயங்கும் 'ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்துறை' இதற்கான ஏற்பாடு களைச் செய்தது. பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்புத்துறை விமானம் மூலம் நேற்று காலை அனுப்பிவைக்கப்பட்ட 'பாலாம்ருதம்' உணவுப் பாக்கெட்டு களின் மதிப்பு ரூ.52.5 லட்சம் என்று உயரதிகாரி தெரிவித்தார். தெலுங்கானா அரசு, கேரளாவுக்கு ரூ. 25 கோடி நிதி உதவியை நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.