கொச்சி: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனிதநேயத்தோடு உதவி புரிந்துவரும் 'அன்போடு கொச்சி' அமைப்புடன் இணைவதில் தன்னார்வலர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள் ளனர். அவர்களுக்கு உணவு, உடை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் 'அன்போடு கொச்சி' இயங்கிவருகிறது.
சரியான நேரத்தில் உதவும் வகையில் அன்போடு கொச்சியின் சார்பாக பல அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத் தட்ட 40 குழுக்களாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. தன்னார்வலர்களின் அழைப்பை ஏற்று தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்க்கும் பணிகளுக்காக மையங்களில் தொலைபேசிகள், கையடக் கக்கணினிகள் மூலம் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர், சோப்பு, பற்பசை, பைகள், பாய்கள், உணவு, ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் போர்வைகள் ஆகிய பொருட்களை கொடுத்து உதவுபவர்களிடம் இருந்து 'அன்பொடு கொச்சி' அமைப்பு பெற்று பாதிக்கப்பட்டவர் களுக்கு விநியோகித்து வருகிறது.

