விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை: மூவர் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலை: மூவர் கைது

1 mins read
Google News Preferred Icon

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜோசப் கொலை வழக்கில் மூவர் கைதாகி உள்ளனர். விசிக தொண்டரணி நிர்வாகியான ஜோசப் இரு திங்களுக்கு முன்பு சென்னையில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஜோசப்புடன் இளம்பெண் ஒருவர் தோழியாகப் பழகி வந்துள்ளார். அதே பெண்ணுடன் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவரும் பழகி வந்துள்ளார். இதையடுத்து ஜோசப்புக்கும் லோகே‌ஷுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கடந்தாண்டு இறுதியில் லோகேஷைச் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோசப் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய லோகேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜோசப்பை கொன்றது தெரியவந்துள்ளது.