தமிழகத்தில் கைதிகளிடம் லஞ்சம் வசூல்: ஒரு நாள் விடுப்புக்கு ரூ.5,000

தமிழகத்தில் கைதிகளிடம் லஞ்சம் வசூல்: ஒரு நாள் விடுப்புக்கு ரூ.5,000

2 mins read

தமிழக சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் விடுப்பில் செல்ல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை இருப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. ஆயுள் தண்டனை உள்ளிட்ட நீண்ட காலத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு இரு வகையாக விடுப்பு வழங்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில் எந்தவொரு குற்றச்சாட் டுக்கும் ஆளாகாமல் நன்னடத் தையுடன் இருப்போருக்கு ஆண் டுக்கு 15 நாட்கள் விடுப்பு வழங் கப்படுகிறது.

முதற்கட்டமாக, 6 நாட்களும் அடுத்து மூன்று கட்டங்களாக தலா மூன்று நாட்களும் அவர்கள் விடுப்பில் செல்லலாம். இது தவிர, ஈராண்டுக்கு ஒரு முறை 30 நாட்கள் விடுப்பும் கைதி களுக்கு உண்டு என தமிழக சிறைப் பிரிவுக்கான விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விடுப்புகளை அனுமதிப்பது பற்றி அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்காக ஒவ்வொரு முறையும் தங்களுக்கான விடுப்பைப் பெற கைதிகள் பெருந்தொகையை லஞ் சமாகத் தரவேண்டி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கூறியுள்ளது.

ஒவ்வொரு நாள் விடுப்புக்கும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை லஞ்சம் தர வேண்டி இருப்பதாகவும் அந்தப் பணத்தை வசூல் செய்யும் முகவர்களாக கைதிகளே செயல் படுவதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. விடுதலை பெற்ற கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இது தொடர்பாக ஊடகங்களிடம் கூறு கையில், மூன்று நாள் விடுப் பைப் பெற ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை கொடுத்ததாகவும் ஆறு நாள் விடுப்புக்கு ரூ.18,000 வரை கொடுத்ததாகவும் தெரிவித் தனர். "இது தொடர்பாக பல புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று சிறைத்துறை டிஜிபி அ‌ஷு டோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.