கேரள வெள்ளத்தில் தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு ஏராளமா னோர் உதவி வருகின்றனர். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் இருந்து நிவாரணப் பொருட்களும் உதவித் தொகை யும் குவிந்து வருகின்றன. இந் நிலையில் தமிழ்நாட்டின் விழுப் புரத்தைச் சேர்ந்த அனுப்ரியா என்னும் எட்டு வயது சிறுமி செய்த உதவி ஊடகங்களில் பிரபலமடைந்து உள்ளது. நான்காண்டுகளுக்கு முன் னர் சைக்கிள் வாங்கி ஓட்ட ஆசைப்பட்ட சிறுமிக்கு அந்த ஆசையை நிறைவேற்ற குடும் பத்தில் வசதி இல்லை.
இருப்பினும் அப்பா, அம்மா அவ்வப்போது கைச்செலவுக்குக் கொடுக்கும் ஐந்து ரூபாய் காசை உண்டியல்களில் போட்டு சேமித்து வந்தார் அனுப்ரியா. தமது பிறந்த நாளான அக்.16க்குள் புதிய சைக்கிள் வாங்கும் அளவுக்கு பணம் சேர்ந்துவிடும் என்று அச் சிறுமி கணக்குப் போட்டிருந்தார். இந்நிலையில், கேரளாவில் தவிக்கும் மக்களுக்கு உதவ தமது உண்டியல்களைத் திறந் தார் அச்சிறுமி. சில்லறைக் காசு களாக ஒன்பதாயிரம் ரூபாய் இருந்தது. அதனை தமது தந்தை சிவசண்முகநாதனிடம் கொடுத் தார். மகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்த அவர், அந்தப் பணத்தை முதலமைச்சரின் நிவா ரண நிதிக்கு வரைவோலை மூலம் அனுப்பி வைத்தார். இத்தகவல் பரவியதும் பலரும் சிறுமியைப் புகழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிரபல ஹீரோ சைக்கிள் நிறுவனம் தயாள உள் ளம் கொண்ட சிறுமி அனுப்ரியா வின் ஆசையை நிறைவேற்ற முன் வந்துள்ளது. புதிய சைக்கிள் ஒன்றை அவருக்கு இலவச மாகத் தர இருப்பதாக அந்நிறு வனம் அறிவித்துள்ளது.

