இன்னும் பத்தாண்டுகளில் 16,000 உயிர்களை வெள்ளம் பறிக்குமாம்

இன்னும் பத்தாண்டுகளில் 16,000 உயிர்களை வெள்ளம் பறிக்குமாம்

1 mins read
9740c6bb-66e4-40a6-9fdc-5aef41345032
-

நூறாண்டு காணாத வெள்ளத் தால் இந்தியாவின் கேரள மாநி லம் தவித்து வரும் நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 16,000க்கு மேற்பட்டோர் வெள்ளத்துக்குப் பலியாகக்கூடும் என்று கணிக் கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பை வெளி யிட்டுள்ள இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு 47,000 கோடி ரூபாய்க் கும் அதிகமான சொத்துகள் சேதமடையும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. எதிர்காலத்தில் இயற்கைச் சீற்றங்களின் வீரியம் கடுமை யானதாக இருக்கும் என இந்தி யாவின் நவீன செயற்கைக்கோள் அளித்த தகவலை மத்திய அரசு சுட்டிக்காட்டியது. அதனைத் தொடர்ந்து, இனி வரப்போகும் ஆபத்துகள் பற்றி ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

உள்துறை அமைச்சும் ஓர் ஆய்வை நடத்தியது. மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரிழப்பு களைத் தடுக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை, பேரிடர் நிவாரணம், மறுவாழ்வுப் பணி உள்ளிட்ட அம்சங்களின் அடிப் படையில் நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி திடீரென்று தாக்கக் கூடிய இயற்கைப் பேரி டர்களால் ஏற்படும் இழப்புகளைத் தடுப்பதற்கான எந்த நடவடிக் கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது. நிலநடுக்கம், புயற்காற்று, சூறாவளி, மழை ஆகிய சீற்றங் களைக் காட்டிலும் வெள்ளத்தால் தான் இந்தியாவில் அதிகமானோர் பலியாவதாகக் கூறப்படுகிறது.

வெள்ளக்காடாய் மாறிப்போன கேரளாவின் ஒரு பகுதி. படம்: ராய்ட்டர்ஸ்