மதுரை: வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்துக்கு விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீரைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். வைகை அணைக்குக் கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர் ஞாயிற்றுக்கிழமை மாலை முழு கொள்ளளவான 69 அடியை எட்டியது. இந்நிலையில், பெரியாறு மற்றும் திருமங்கலம் பாசனப் பகுதி விவசாயிகள் முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், பெரியாறு மற்றும் திருமங்கலம் பாசனப் பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீர் திறந்து விடத் தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,130 கன அடி தண்ணீரைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
1 mins read

