சென்னை: இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் பொதுஅறிவு பாடப்பகுதியில் நடிகர்கள் ரஜினி காந்த், ஷாருக்கான், ஜாக்கி சான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கேத் ரினா கைஃப் போன்ற திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக 'சிபிஎஸ்இ'க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்த மனுவில், "தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி தனி யார் 'சிபிஎஸ்இ' பள்ளிகள் ஒன் றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை அதிக அளவில் பாடங்களைப் போதிக்கின்றன.
"இரண்டாம் வகுப்பு வரை கண்டிப் பாக வீட்டுப்பாடம் கொடுக் கக் கூடாது என்ற விதிகளை மீறி வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படு கின் றன. அதிக அள வில் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை வாங்கவேண்டுமென பள்ளி நிர்வா கங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால் குழந் தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். "எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் 'என்சிஇஆர்டி' பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், "அனைத்துப் பள்ளிகளும் 2ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக் கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என உத்தரவிட்டிருந்தார்.

