நூறாண்டு காணாத மழையும் வெள் ளமும் கேரள மாநிலத்தைக் கடுமையாகச் சிதைத்துவிட்ட நிலையில் அம்மாநிலத் தின் துயரம் இன்னும் தொடருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் கேர ளாவின் 3.48 கோடி மக்கள்தொகை யில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவற்படை, துணை ராணுவப் படை ஆகியவற்றைச் சேர்ந்தோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தைத் தவிர எஞ்சிய பதின் மூன்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்குப் பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களையும் பண உதவியையும் செய்து வருகின்றனர். மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. பொய்ச் செய்திகளும் போலி நிதித் திரட்டும் இந்நிலையில் பொய்ச் செய்திகளும் போலியாக நிதி திரட்டும் சம்பவங்களும் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. முதலமைச்சர் நிவாரண நிதி என்னும் பெயரில் அரசாங்க விளம்பரத்தைப் போல போலியாக வெளியிட்டு சில வங்கிக் கணக்குகள் கொடுக்கப்பட்டு உள்ளன. 'ஃபேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் அப்' சமூக ஊடகங்கள் மூலம் இந்தச் செய்தி வேகமாகப் பரவி வருகிறது.
துயரில் தவிக்கும் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களின் விநியோகம் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. படம்: ஏஎஃப்பி

