இந்தியாவின் மும்பை நகரில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் தீச்சம்பவத்தில் மாண்டனர். பரேல் என்னும் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்னும் 17 மாடிக் கட்டடத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் திடீர் என்று தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் கட்டடத்தில் எரிந்த தீப்பிழம்புகளின் மீது நீர் ஊற்றி அணைத்தனர். கடும் முயற்சியில் இறங்கி உள்ளே சிக் கியவர்களைக் காப்பாற்றினர்.
மீட்கப்பட்டவர்களில் பலத்த காயமடைந்த 20 பேர் கேஇஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீப்பற்றியதற்கான காரணம் விசா ரிக்கப்பட்டு வருகிறது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கட்டடத்தின் உயர்மாடிகளில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

