புதுவை: காரைக்கால் பகுதியில் உள்ள ஆறுகளில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு காவிரியின் கடைமடைப் பகுதியில் உள்ள கால்வாய்களைச் சரியாகத் தூர் வாரவில்லை என்றும், அதன் கார ணமாக காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை என் றும் செய்தியாளர்களிடம் பேசுகை யில் அவர் குற்றம் சாட்டினார். "காரைக்கால் பகுதியில் திரு மலைராஜன் ஆறு, நூலாறு, அரச லாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரி விடையான் ஆறு, வாஞ்சியாறு உள்ளிட்ட காவிரி கிளையாறுகள் பாய்கின்றன.
இவற்றுள் இரு ஆறு களில் மட்டுமே தண்ணீர் வருகி றது. மற்ற ஆறுகளில் வரவில்லை. "தமிழக எல்லைப் பகுதியான காவிரி கடைமடைப் பகுதியில் உள்ள கால்வாய்களைத் தமிழக அரசு தூர் வாரவில்லை. எனவே தான் காரைக்கால் ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லை," என்றார் நாராயணசாமி. காவிரி கடைமடைப் பகுதியில் கருவேல மரங்கள் மிகுந்திருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், அம்மரங் களை வெட்டி ஆறுகளைத் தமிழக அரசு தூர் வார வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக முதல்வ ருக்குத் தாம் கடிதம் எழுத இருப்பதாகவும் முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.

