தஞ்சை: குடிமராமத்து, தூர் வாறும் பணிகளுக்காக அரசு ஒதுக்கிய பணம் சூறையாடப் பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் வந்து விட்டது என்று முதல்வரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பட்டுக் கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். கடைமடைப் பகுதிகளுக்குச் செய்தியாளர்களை அழைத்துக் கொண்டு அமைச்சர்களும் அதி காரிகளும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்தால் உண்மை தெரியும் என்று குறிப்பிட்ட அவர், உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரி வித்து மக்களை ஏமாற்ற முயல் வதாக சாடினார்.
கடைமடைப் பகுதிக்கு நீர் வராவிட்டால் தொடர் போராட் டங்கள் நடத்தப்படும் என்று எச்ச ரித்த அவர், தமிழக நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறி யாளருக்கு நீர் மேலாண்மை குறித்து எந்த அடிச்சுவடும் தெரியவில்லை என்றார். "ஒருபக்கம் தண்ணீர் கடலில் சென்று கலக்கும்போது, மற்றொரு பக்கம் வறட்சி என்றால் நீர் மேலாண்மையில் மாவட்ட நிர்வா கத்தின் தோல்விதான் காரணம். இதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தரத் தீர்வு. "மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை இரண்டு முறை எட்டிய பிறகும் கூட, கடை மடைப் பகுதிக்குத் தண்ணீர் வரா ததற்கு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்," என்றார் முத்தரசன்.

