உலகச் செம்மொழித் திருநாள்: கவிஞர் வைரமுத்து வலியுறுத்து

உலகச் செம்மொழித் திருநாள்: கவிஞர் வைரமுத்து வலியுறுத்து

1 mins read
Google News Preferred Icon

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழர்கள் ஒவ்வோர் ஆண்டும் 'உலகச் செம்மொழித் திருநாளாக' கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார். கருணாநிதி, பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் தகுதியானவர் என்பதை மத்திய அரசே உணரும் எனத் தாம் நம்புவதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "கருணாநிதியின் லட்சியங்கள், உழைப்பு, பேரன்பு ஆகியவற்றைக் கொண்டு மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து கட்சியை வழிநடத்துவார் என நாடு நம்புகிறது. நானும் வாழ்த்துகிறேன். "உலகத் தமிழர்களின் அடையாளமாக இருந்தவர் கருணாநிதி. உலகத் தமிழர்கள் அவரை எந்தளவுக்கு நேசித்தார்களோ அந்தளவுக்கு கருணாநிதியும் அவர்களை நேசித்தார்," என்றார் வைரமுத்து.