கர்நாடக அமைச்சரிடம் சீறிய நிர்மலா

கர்நாடக அமைச்சரிடம் சீறிய நிர்மலா

1 mins read

மடிகேரி: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்திய பாது காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அதன் பிறகு முன் னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, கர் நாடக மாநில அமைச்சர் சாரா மகே ‌ஷும் உடன் இருந்தார். அப்போது மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தலாமா என்று அவர் கேட்டுள்ளார்.

அதற்கு கோபப்பட்ட நிர்மலா சீதா ராமன், "உங்கள் அதிகாரிகள் உங்க ளுக்கு முக்கியம் என்றால் எனக்கு எனது அதிகாரிகள் முக்கியம்," எனச் சீறினார். நிர்மலா பொறுமை யிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சாரா மகேஷ், "ராணுவ அதிகாரிகள் பங்குபெற்ற ஒரு கூட்டத் தில் மத்திய அமைச்சர் மரி யாதையுடன் நடந்திருக்க வேண்டும். மேலும் அவர் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் கிடையாது. கர்நாடக பாஜகவால் இம்மாநிலத்தில் இருந்து நியமிக்கப் பட்டவர். எனவே அவர் இன்னும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும்," என்றார் கிண்டலாக.