கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

1 mins read
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கனமழையால் பெருந்துயரை எதிர்கொண்ட கேரள மக்களின் ஓணம் பண் டிகை களையிழந்து காணப்பட்ட நிலையில், அம்மாநிலத்திற்கு மீண் டும் கனமழை எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்தாலும் அதன் சுவடு மாறாத நிலையில் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை. வெள்ளப்பாதிப்பால் பல இடங்களில் கோயில்களும் வெள்ள நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மறுசீர மைப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கேரளாவின் சில பகுதிகளில் வரும் 27, 28ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்றும் அதற்கு அடுத்த நாள் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வடகேரளப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டு உள்ளது.