எப்போதும் பயத்தில் உள்ளார் ஸ்டாலின்: அமைச்சர் கிண்டல்

எப்போதும் பயத்தில் உள்ளார் ஸ்டாலின்: அமைச்சர் கிண்டல்

2 mins read

தி.மலை: மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பித்தால் போணி யாகாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணனைக் கண்டாலும் பயம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டாலும் பயம் என்றார். "அழகிரிக்கு திமுகவில் இட மில்லை என்று தம்பி மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வைத்துவிட்டார். ஸ்டா லின் எப்போதும் பயத்திலேயே உள்ளார். அவருக்கு தெரிந்த ஒரே வார்த்தை முதல்வரை பார்த்து பதவி விலகு என்று சொல்வது தான்," என்றார் உதயகுமார்.

முதல்வர் மீது தேவையின்றி ஊழல் புகார்களை சுமத்துவதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கு தொடர்ந்தாலும் அதை எதிர் கொண்டு முதல்வர் பழனிசாமி வெற்றி பெறுவார் என்றார். "ஜெயலலிதாவிற்குப் பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திச் செல்கின்றனர். "இதனால் நீதிமன்றம் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் எனக் கருதுகிறார்கள்.

அவ்வாறு நடக்காது. அதிமுகவின் லட்சக் கணக்கான தொண்டர்கள் வீறு கொண்டு எழுவார்கள்," என்றார் அமைச்சர் உதயகுமார். அதிமுக அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் எடுத்துக் கூறும் வகையில் மிதிவண்டிப் பேரணி நடத்தப்படுவதாகக் குறிப் பிட்ட அவர், எதிர்க்கட்சியினரின் தவறான பிரசாரங்களை எதிர் கொள்ளும் வகையில் இப்பேரணி அமையும் என்றார். "அதிமுக அரசின் சாதனை களை விளக்கி அதிமுக ஜெ பேரவை சார்பில் மதுரையில் முதல்கட்ட சைக்கிள் பேரணி துவங்கப்பட்டது. இதையடுத்து தற்போது திருவண்ணாமலையில் நடக்கிறது," என்றார் உதயகுமார்.