லண்டன்: வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரை யாற்றவிருந்த நிகழ்ச்சியை சீர் குலைக்கும் முயற்சியை போலி சார் முறியடித்தனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசவிருந்த நிலையில், அக்கூட்டத்தைச் சீர் குலைக்கும் நோக்கில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், மூன்று பெண்களும் ஓர் ஆடவரும் அரங்கிற்குள் நுழைந்தனர். ஆனால் அவர்களின் நடவடிக் கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, போலிசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
1984ன் சீக்கிய கலவரத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல என்று ராகுல் கூறியதால் தாங்கள் கோப மடைந்ததாக அவர்கள் கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகம் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து வந்த ராகுல் வெளிநாட்டு வாழ் இந்தியர் கள் மத்தியில் பேசினார். அப்போது மோடி சுதந்திர தின உரையில் இந்தியா எனும் தூங்கிக் கொண்டிருந்த யானையை தான் தட்டி எழுப்பியதாகக் கூறியது அகங்காரமானது என்று சாடி னார். இவ்வாறு கூறியதன் மூலம் இந்தியாவின் முந்திய தலைவர்களை மோடி அவமதித்துவிட்ட தாக ராகுல் பேசினார்.
முன்னதாக லண்டனில் இந்தியச் செய்தியாளர்கள் கூட்ட மைப்பினரோடு பேசிய அவர், தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்று கூறினார். இதற்கிடையே, மக்களவைத் தேர்தலை வலிமையாக எதிர் கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சிக்குள் மூன்று புதிய குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சித் தலைமை சனிக் கிழமை வெளியிட்டது. ராகுல் காந்தியுடன் மேற் கொள்ளப்பட்ட ஆலோசனையின் பேரில் பிரதானக் குழு, தேர்தல் அறிக்கை குழு, விளம்பரக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.

