புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டுட னான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த தொகையைவிட, இரு மடங்கு அதிக தொகைக்கு தற்போதைய மத்திய அரசு ஒப்பந்தத்தை மாற்றி இருப்ப தாகவும் இதில் முறைகேடு நடை பெற்றிருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப் படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மீது, 5,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் வெளி யான கட்டுரை தங்கள் நிறுவனத் துக்குக் களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் இருப்ப தாகக் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத் துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

