திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு

2 mins read

திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று ஒருமன தாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐம்பது ஆண்டுகாலம் திமுக தலைவராக இருந்த மு.கருணா நிதியின் மறைவையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு அண்ணா அறிவால யத்தில் நேற்று கூடியது. கூட்டத்திற்குச் செல்லுமுன் கோபாலபுரம் வீட்டிற்குச் சென்று தம் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேர், செயற்குழு உறுப்பினர் கள் 700 பேர், சிறப்பு அழைப்பாளர் கள் என கிட்டத்தட்ட 5,000 பேர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற் றனர். கட்சியின் தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் என இருவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் அவ்விரு வரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று திமுக பொதுச் செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தார்.

ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட செயல் தலைவர் பதவி நீக்கப்படு வதாகவும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின். மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி ஆகியோ ரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் கூட்டத்தில் கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜி, மாணவி அனிதா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் ஆகியோரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் உயர்ந்த தலைவரான கருணா நிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய ஸ்டாலின், "கடைசி மூச்சு உள்ளவரை தமிழ் இனத்திற்காக உழைப்பேன்," என உறுதியளித்தார்.