சென்னை: முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதற்கு அரசியல் ரீதி யான காரணம் ஏதுமில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்குத் திடீரென சென்றார் திருமாவளவன். அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நட வேண்டும் என முதல் வரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். "எனது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் கூறினார். இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல," என்றார் திருமாவளவன்.
திருமாவளவன், முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு
1 mins read

