சென்னை: காவிரி ஆற்றில் தற்போது இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள் ளனர். முன்பு இரவு நேரத்தில் மட்டுமே நடந்து வந்த மணல் திருட்டு கடந்த சில தினங்களாக பகல் நேரத்திலும் நடப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குமாரப்பளையம் அருகே காவிரி ஆற்றில் சிலர் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்படும் மணல் கரையோரப் பகுதிகளில் குவிந்துள்ளது. இந்த மணலைச் சேகரித்துக் கரைக்கு அருகே உள்ள பகுதி களில் குவித்து வைக்கும் மணல் கொள்ளையர்கள், இரவு நேரத்தில் டிராக்டர்களில் வந்து மணலை எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்துப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற் கொண்டனர். அப்போது மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பிச் சென்றபோதிலும் மணல் கொள் ளைக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங் களைப் பறிமுதல் செய்தனர்.
அதன் பிறகு தொடர் கண் காணிப்பு இல்லாததால் மீண்டும் மணல் கொள்ளை தொடங்கி உள்ளதாகப் பொதுமக்கள் கூறி யுள்ளனர். இதுகுறித்து பவானி கிழக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் நாமக் கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது. அதில் மணல் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. "காவிரி ஆற்றின் வழி இயற்கை அளித்துள்ள மணலை இரவு, பகலாக கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். மணல் கடத்தல் மூலம் அரசுக்குப் பல நூறு கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே மணல் கடத்துவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். "காவல்துறை மற்றும் அதிகாரி களின் கண்காணிப்பு 24 மணி நேரமும் இருக்க வேண்டும். அப் போதுதான் மணல் கொள்ளையர் களைப் பிடிக்க இயலும்," என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர் வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே மணல் கொள் ளையைத் தடுக்க உரிய நட வடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

