சென்னை அடையாற்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு நோட்டீஸ்

சென்னை அடையாற்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு நோட்டீஸ்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: அடையாற்றை ஆக்கிர மித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என அரசு உத்தர விட்டுள்ளது. ஐநூறுக்கும் மேற் பட்ட வீடுகளின் உரிமையாளர்க ளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பேர ழிவிற்கு அடையாற்றை ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட கட்டடங்களே காரணம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. அந்த அடிப்படையில் அடையாற்றில் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால் வீடுகள் இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் சுமார் 42 கிமீ தூரத்துக்கு ஓடும் அடையாற்றை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆண்டு இறுதிக் குள் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட் டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங் களை அகற்றும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை, பொழிச்சலூர் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ள 49 வீடுகளின் உரிமை யாளர்களுக்கும் தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரி விக்கின்றன.