விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வரும் நடிகர் ரஜினி காந்த், சாதி, சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு 'ரஜினி மக்கள் மன்றத்தில்' இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்கள் மன்ற அமைப்பை வலுப் படுத்துவதற்கும் அன்றாடச் செயல் பாடுகளை நெறிப்படுத்துவதற்காக வும் மன்றத்தின் நிர்வாக விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில விதிமுறை களுக்கு உட்பட்டால் மட்டுமே மன்றத்திலும் மகளிர் அணி, இளையர் அணி, விவசாயிகள் அணி, நெசவாளர்கள் அணி, மீனவர்கள் அணி என அதன் வெவ்வேறு பிரிவுகளிலும் உறுப் பினராகச் சேர முடியும்.
ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரான ரஜினிகாந்த் வெளி யிட்டுள்ள அந்த 36 பக்க விதி முறைகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் மன்றத்தில் உறுப்பினராகச் சேர முடியும். அதே நேரத்தில், அவர்கள் எந்த ஒரு சாதி, சமயம் சார்ந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. அதேபோல, மன்றத்தின் இளை யர் அணியில் 35 வயதுக்குக் கீழானவர்கள் மட்டுமே சேர்க்கப் படுவர். உறுப்பினர்களாக இருப்போர் சமூகத்திற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற் படும் விதத்திலோ நடந்துகொள் ளக்கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது கருத்துகளைச் சொல் லும்போது கண்ணியமான வார்த் தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களை இழிவு படுத்தும் வகையில் எதையும் சொல்லக்கூடாது என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், "இணையம் வாயி லாகத் தங்கள் கருத்துகளைப் பதிவிடும் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் மக்கள் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது," என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

