அரசியல் நாகரிகம் தேவை: ஸ்டாலினை சாடும் ஜெயக்குமார்

அரசியல் நாகரிகம் தேவை: ஸ்டாலினை சாடும் ஜெயக்குமார்

1 mins read

சென்னை: தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒருவ ருக்கு அரசியல் நாகரிகம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அரசைத் தூக்கி எறிய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது சேற்றை வாரி இறைக்கின்ற செயல் என்று அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "ஸ்டாலின் பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். தன் முதுகுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும். ஊழலுக்காக மட்டுமே கலைக்கப்பட்ட ஆட்சி என்று சொன்னால் அது திமுக ஆட்சிதான்," என்றார் ஜெயக்குமார். தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுகதான் என்று குறிப்பிட்ட அவர், அக்கட்சியினர் மற்றவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.