தினகரன்: அதிமுகவுக்கு தேர்தல் வைப்புத்தொகை கூட கிடைக்காது

தினகரன்: அதிமுகவுக்கு தேர்தல் வைப்புத்தொகை கூட கிடைக்காது

1 mins read

சென்னை: திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி தரப்பு தேர்தல் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதே பெரிய விஷயம் என்று அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவைத் திரையில் அதிகம் பார்க்க முடியாத குறையைத் தமிழக அமைச்சர்கள் பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். "இடைத்தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என அமைச் சர்கள் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வைப்புத்தொகை கூட கிடைக்காது. எதிர் வரும் தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிடும்," என்றார் தினகரன்.