திருச்சி: முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகு களில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மதகுகளைச் சீரமைக்கும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ள னர். நேற்று முன்தினம் மேலணை யின் அடித்தளத்தில் நீரில் மூழ்கி ஆய்வு செய்யும் நீச்சல் வீரர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 22ஆம் தேதி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்தன. இதை யடுத்து மதகுகளைச் சீரமைக்க இரண்டரை லட்சம் மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப் பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17ஆவது மதகு வரை சுமார் 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. தற்போது அப்பணியில் பாதி முடிவடைந் துள்ளது.
இந்நிலையில் மேலணையின் இதர 36 மதகுகள் நல்ல நிலையில் உள்ளனவா? என்று நீச்சல் வீரர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த வீரர்கள் ஆழ்கடலில் நீரில் மூழ்கி பயிற்சி பெற்றவர்கள். "அணையில் ஆய்வு செய்வதற் காக அவர்களை வரவழைத்தோம். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் முற்றிலுமாக இடிந்து விழும் அபாயமுள்ளது, எனவே சீரமைப்புப் பணிகளை வேகப் படுத்தி உள்ளோம்," எனப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரி வித்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே காவிரி ஆற்றில் தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், திருச்சியில் கனமழை பெய்ததாலும் முக்கொம்பு கொள்ளிடம் மேலணை யில் சீரமைப்புப் பணிகள் பாதிக் கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

