சிலைக் கடத்தல் வழக்குகள்: சிபிஐ விசாரணை கோரும் தமிழக அரசு; மத்திய அரசு அனுமதி மறுப்பு

1 mins read

சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்நிலையில் தமிழக அரசின் பரிந்துரையில் முக்கிய ஆவணங் கள் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிலைக் கடத்தல் தொடர்பாக பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந் நிலையில் இந்த வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கு களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரைத்தது தமிழக அரசு. ஆனால் இந்தப் பரிந்துரையில் முக்கிய ஆவணங்கள் இடம்பெற வில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.