திருமாவளவன்: அரசியலுக்கு வர திரைப்பட நடிகர் என்ற கவர்ச்சி மட்டும் போதாது

திருமாவளவன்: அரசியலுக்கு வர திரைப்பட நடிகர் என்ற கவர்ச்சி மட்டும் போதாது

2 mins read

சென்னை: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தனிக் கட்சி தொடங்கலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நெய்வேலியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், அரசியல் வெற்றிடத்தை நிரப்ப திரைப்பட நடிகர் என்ற கவர்ச்சி மட்டுமே போதும் என நடிகர்கள் சிலர் நினைப்பதாகக் குறிப்பிட்டார். "தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ள தாகப் பலர் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள். தங்களால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்றும் கருதிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மக்கள்தான் முடிவு செய்வர்.

"தனது கட்சியில் சேர விரும்பு வோர் எந்தச் சாதி அமைப்பிலும் இருக்கக் கூடாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளது ஏற்கத் தக்கது. அமைப்பு ரீதியாகவும், சாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். ரஜினிகாந்த் இதைச் செயல்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்," என்றார் திருமாவளவன். நடிகர் விஷால் புது அமைப்பு தொடங்கியது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையே நடிகர் கமல் தமது கருத்துகளை அடிக்கடி மாற்றுவதாக துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எனவே கமல்ஹாசனின் கருத் துகளுக்கெல்லாம் தம்மால் பதில ளிக்க முடியாது என்றார் அவர். இந்நிலையில் அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எனினும் மக்களவைத் தேர்தலில் களமிறங்குவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடா விட்டாலும் அதிமுக அரசின் கடமைகளை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் பாடம் புகட்டுவோம் என்றார் கமல்.