தி.நகரில் இறந்துகிடந்த டச்சுப் பெண்

தி.நகரில் இறந்துகிடந்த டச்சுப் பெண்

1 mins read

சென்னை: நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது பெண் திநகரில் உள்ள மாநாட்டு நிலையத்தில் இறந்துகிடந்தார். கடந்த திங்கட்கிழமை லிண்டா ஐரின் தம்மை ஒரு செய்தியாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு வெங் கடேசன் சாலையில் உள்ள மாநாட்டு நிலையத்தில் உள்ள வாடகை அறைக்குப் பதிவு செய்தார். வியாழக்கிழமை காலை அறையை காலி செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் வியாழன் மதியம் 12.30 மணியி லிருந்து அவரிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அறையின் கதவைத் தட்டினர்.

அதற்கும் பதில் இல்லாததால் 12.45 மணி அளவில் மாற்றுச் சாவியைக் கொண்டு ஊழியர்கள் கதவைத் திறந்தனர். அப்போது லிண்டா ஐரின் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் துறையினர் லிண்டா ஐரினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். "டச்சுப் பெண் இறந்தது எப்படி என்பதை விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று காவல்துறையினர் கூறினர்.