இந்தியாவில் அரசதந்திரிகள் பற்றாக்குறை: உலக செல்வாக்கைப் பெறும் முயற்சிக்குத் தடை

2 mins read

இந்தியாவில் அரசதந்திரிகள் பற்றாக்குறை பெரிய அளவில் இருந்துவருவதாகவும் உலகள வில் இந்தியாவிற்கு அதிக செல் வாக்கைப் பெற்றுத் தரவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் இந்தப் பற்றாக்குறை காரணமாக தடைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள் என்றாலும் வெறும் 5 மில்லியன் மக்களைக் கொண்ட நியூசிலாந்து நாட்டில் உள்ளது போன்ற அளவுக்குத்தான் இந்தியா அரசதந்திரிகளைக் கொண்டிருக்கிறது என்று முன் னாள் வெளியுறவு துணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்து இருக்கிறார். இந்திய பசிபிக் வட் டாரத்தில் இந்தியா முக்கிய சக்தி யாக உருவெடுப்பதில் அமெரிக்க அதிபரின் நிர்வாகம் நாட்டம் கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

புதுடெல்லியில் போதிய அள வுக்கு ஊழியர்களைக்கொண்ட வெளியுறவு அமைச்சு இருக்க வேண்டும் என்ற தேவை அவசர அவசியமான ஒன்றாக ஆகிவரு கிறது என்று சசி தரூர் கூறினார். வெளி விவகாரம் தொடர்பான இந்தியாவின் நாடாளுமன்றக் குழுவுக்கு இவர் தலைமை தாங்கு கிறார். இந்தியாவின் பரப்பளவை யும் அதன் இலக்குகளையும் வைத்துப் பார்க்கையில் இந்தப் பற்றாக்குறை மிக அதிகமானதாக இருக்கிறது என்றார் அவர்.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரும் தற்காப்பு அமைச்சரும் அடுத்த வாரம் புதுடெல்லி வர விருக்கிறார்கள். இந்த நிலையில் அரதந்திரிகள் பற்றாக்குறை தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் 940 வெளியுறவுச் சேவை அதிகாரிகள்தான் இருக் கிறார்கள். நியூசிலாந்து அரச தந்திரிகள் எண்ணிக்கை 885 ஆக இருக்கிறது. ஜப்பான், ஆஸ் திரேலியா நாடுகளில் அரசதந்திர சேவைகளில் ஈடுபட்டு இருப்பவர் களின் எண்ணிக்கை ஏறக்குறைய 6,000 ஆக உள்ளது.