'தகாத உறவு குற்றமாகாது'

'தகாத உறவு குற்றமாகாது'

2 mins read
57eb80c3-1059-4406-8acf-549c80b37072
-

திருமணத்திற்குப் பிந்திய தகாத உறவை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை அளிக்கும் வகையிலான 497வது சட்டப் பிரிவும் ரத்து செய்யப்பட்டது. இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர், ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் ஆண்=பெண் பாகுபாடு பார்க்கிறது என்று கூறி, அரசியலமைப்புச் சட்டப்படி அது சரியானதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. "தகாத உறவு சட்டவிரோதமாகாது. 497வது சட்டப் பிரிவின்படி, தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது ஏற்புடைய தல்ல. தகாத உறவு எவரையும் தற்கொலைக்குத் தூண்டாத வகையில் அதைக் குற்றமாகக் கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் உடைமை அல்ல. ஒருவரது ஒப்புதலுடன் பாலியல் உறவுகொள்வதை, பாலியல் வன்புணர்வாகக் கருத முடியாது. ஆகையால், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக் கும் 497வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது," என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரி வித்தனர்.

திருமணம் எனும் புனிதமான பந்தத்தைக் காக்கத்தான் 150 ஆண்டுகளுக்கு முன்பே இச்சட்டம் இயற்றப்பட்டது என்ற அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், "கணவர் என்பவர் மனைவிக்கு முதலாளி அல்ல. இக்காலத்தில் குடும்பப் பொறுப்பு அனைத்திலும் பெண்களும் பங்கெடுக் கின்றனர். அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது," என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.