சென்னை: தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலி சார் சென்னையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 89 சிலைகளைக் கண்டெடுத்துப் பறிமுதல் செய்தனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்றது முதல் தமிழகக் கோவில்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
சிலைக் கடத்தல் தொடர்பாக தீனதயாளன் என்பவர் கைதா னார். விசாரணையின்போது சென்னையைச் சேர்ந்த ரன்வீர்ஷா என்ற தொழிலதிபரிடம் சிலை களை விற்றதாக அவர் கூறி இருந்தார். இதையடுத்து ரன்வீர்ஷா வீட் டில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 ஐம்பொன் சிலை கள் உட்பட 60 சிலைகள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும் பழமை வாய்ந்த கோவில்களின் தூண்களும் அந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க இடமில்லை என அரசு அதிகாரி கள் கூறிவிட்டதாகப் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

