தீப மலையில் ஏறிய வெளிநாட்டினர் கைதாகினர்

தீப மலையில் ஏறிய வெளிநாட்டினர் கைதாகினர்

1 mins read
Google News Preferred Icon

தி.மலை: தடையை மீறி தீபமலை யில் ஏறிய வெளிநாட்டினர் 12 பேரை திருவண்ணாமலை வனத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின்போது குறிப்பிட்ட சில பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் நேற்று முன் தினம் பெண்கள் உட்பட வெளி நாட்டினர் 12 பேர் அனுமதி இன்றி மகாதீப மலையில் ஏறி உள்ளனர்.

இதுகுறித்த தகவல் தெரிய வந்ததும் வனத்துறை அதிகாரி கள் தீபமலைக்கு விரைந்து சென்றனர். அங்கு மலையேறிய 12 பேரும் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி தீபமலையில் ஏறினால் கைது நடவடிக்கை பாயும் என வனத்துறை அதிகாரிகள் மீண்டும் எச்சரித் துள்ளனர்.