65 வயது தலைமை ஆசிரியரை மணந்துள்ள 20 வயது மாணவி

65 வயது தலைமை ஆசிரியரை மணந்துள்ள 20 வயது மாணவி

1 mins read

ராமேசுவரம்: பொதுவாக 'காத லுக்குக் கண் இல்லை' என்பர். ஆனால் இப்போது 'காதலுக்கு வயதும் இல்லை' என்பது போல் 45 வயது வித்தியாசத்துடன் ஒரு முரண்பட்ட காதல் கதை நடந் துள்ளது. இந்தக் கதை மண வாழ்க்கையிலும் முடிந்துள்ளது. 65 வயது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான ஜெய்கிருஷ்ணன், 20 வயது சட்டக் கல்லூரி மாணவியான மகத்தை திருமணம் புரிந்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநில பள்ளிக் கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஜெய் கிருஷ் ணனுக்கு திருமணமாகி மூன்று மகனும் ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற இந்த மாணவி யும் படித்துவந்துள்ளார்.

ஜெய்கிருஷ்ணன் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும் மாணவிக்குக் கல்வி தொடர் பான ஆலோசனைகள் கூறி வந்த துடன் டியூசனும் எடுத்துள்ளார்.