நாகை: ஆட்சி செய்த கட்சி, ஆட்சி செய்து கொண்டிருக்கும் கட்சி மீதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று டிடிவி தினகரன் தெரிவித் துள்ளார்.
வேளாங்கண்ணியில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார். "திருப்பரங்குன்றத்தில் நான் நிற்க வேண்டிய அவசியமில்லை.
எங்கள் கட்சி சார்பில் தொண்டர் கள் களமிறங்குவார்கள். அமைச் சர்கள் விஜயபாஸ்கருக்கும் உதயகுமாருக்கும் எம்எல்ஏ பத வியில் இருந்து விலகி இடைத் தேர்தலில் எங்கள் வேட்பாளர் களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் திராணி உள் ளதா?" என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.
இடைத்தேர்தலை நடத்த விடாதீர்கள் என்று ஆளுங்கட்சி யினர் டெல்லியில் கேட்டதாக தாம் கேள்விப்பட்டதாகக் குறிப் பிட்ட அவர், இடைத்தேர்தல் நடந்தால்தான் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது தெரியும் என்றார்.

