தஞ்சை: கனமழை காரணமாகவும், காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் இந்தாண்டு தமிழகத்தில் நெல் சாகுபடி இருமடங்காக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 5,432 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 2,895 ஹெக்டேரில் மட்டுமே நெல்சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரிலும், நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேரிலும், தஞ்சையில் 55 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயனடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

