உயர் நீதிமன்றம்: அமைதியாக போராடுபவர்களை கைது செய்யாதீர்

உயர் நீதிமன்றம்: அமைதியாக போராடுபவர்களை கைது செய்யாதீர்

1 mins read

சென்னை: சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடு பவர்களைக் கைது செய்யக் கூடாது எனக் காவல்துறை யினருக்கு அறிவுரை கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நேற்று நடந்த வழக்கின் அடுத்தகட்ட விசா ரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. சென்னை - சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்தை எதிர்த்தும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் விவசாயிகளும் நில உரிமை யாளர்களும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசா ரணைக்கு வந்தது.

அப்போது, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டத்திற்கு எதிராக அமைதியாக, ஜனநாயக வழியில் போராடுபவர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளைக் காவல் துறையினர் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். உண்மையாகப் போராடு பவர்கள் யார், சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராடுபவர்கள் யார் என்ற வித்தியாசத்தை காவல் துறையினர் அறியவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.