புதுடெல்லி: குஜராத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அது, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரையே அவ மதிக்கும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். நர்மதா நதிக் கரையில் அமையும் 182 அடி உயரமுள்ள பட்டேல் சிலையை அவரது 143வது பிறந்த நாளான வரும் அக்டோபர் 31ஆம் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் சிலையின் பின்புறம் 'மேட் இன் சீனா' என பொறிக்கப்பட்டுள்ளதால் அது பட்டேலை அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி கூறினார்.
'பட்டேலுக்கு அவமதிப்பு'
1 mins read

