காந்தி தொடங்கிய பள்ளிக்கு நிதி நெருக்கடி

காந்தி தொடங்கிய பள்ளிக்கு நிதி நெருக்கடி

2 mins read

ராஜ்கோட்: இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தொடங்கிய பள்ளியைக் காப்பாற்ற அப்பள்ளியின் நிர்வா கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர். நிதி பற்றாக்குறை காரணமாக அப்பள்ளிக்கு சிக்கல் ஏற்பட்டுள் ளது. பள்ளியை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பள்ளியின் நிர்வாக அறங்காவ லரும் பொதுச்செயலாளருமான ஜித்து பட், "பள்ளியை நடத்த ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தேவைப்படு கிறது. அரசிடம் இருந்து மானியம் பெற முயற்சி செய்தோம். தொடக் கப்பள்ளி, இசைப் பள்ளிக்கு மானியம் இல்லை என்று அரசின் விதி உள்ளது எனத் தெரிவிக்கப்பட் டது," என்றார். மகாத்மா காந்தி பிறந்த ராஜ் கோட்டில் உள்ள ராஷ்ட்டிரிய சாலா பள்ளியை 1921ல் காந்தி தொடங்கி வைத்தார்.

சுதந்திர போராட்டத்துக்கு மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தோடு அவர் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். 1939ல் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் நடத்தி னார். மேலும் தென் ஆப்பிரிக் காவிலிருந்து திரும்பிய காந்தி, ஆங்கிலேயர் கல்வியின் அடிமைத் தனத்தைப் போக்க அவர் மாநில மொழி கல்வியையும் இப்பள்ளியில் புகுத்தினார். இங்கு 2000ஆம் ஆண்டு வரையில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்றனர். ஆனால் தற்போது 37 மாண வர்கள் மட்டுமே படித்து வரு கின்றனர். அன்றைய ராஜ்கோட் மாவட்ட ஆட்சியாளர் லகாஜிராஜ் என்பவர் வழங்கிய 13 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பள்ளியை நடத்தி வரும் ராஷ்ட்டிரிய சாலா அறக்கட்டளைக்கு தற்போது யாரும் நன்கொடை வழங்க முன் வரவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடியை அது எதிர்நோக்கு கிறது. இந்த நிலையில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி யையும் இம்மாதம் 30ஆம் தேதி குஜராத்துக்கு வரும் பிரதமர் மோடியையும் சந்திக்க பள்ளி நிர் வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது பள்ளியைக் காப்பாற்ற அவர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.