சபரிமலையில் பெண்களுக்குக் கழிவறை கட்ட நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் பெண்களுக்குக் கழிவறை கட்ட நீதிமன்றம் உத்தரவு

2 mins read

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயிலுக்குச் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சபரிமலை வரும் பெண்களுக்குக் கழிவறை உள் ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற் படுத்த 100 ஹெக்டர் நிலம் ஒதுக் கப்படும் என முதலமைச்சர் பின ராயி விஜயன் கூறியதாக அந்தக் கோயில் நிர்வாகம் தலைவர் நேற்று தெரிவித் துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

இதை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அர சியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நிர்வாகத் தலைவர் பத்மகுமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜய னுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மகுமார், நேற்று பல விவரங்களைத் தெரிவித்தார். சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில், பெண்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்காக, 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி தந்ததாகக் கூறிய அவர், சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் சபரி மலைக்குப் பெண்கள் பெருமளவில் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுத் தக்கல் செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அதன் தொடர்பில் அக்டோபர் 3ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார். சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் பட்டுள்ளதற்கு இந்தியாவில் ஆதர வும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பாரம்பரியத்தை மீறக்கூடாது என்று சிலர் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்கள்.