சென்னை: சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் சென்ற பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாரடைப்பால் காலமானார். தங்கப்பன் ராமச்சந்திரன் என்ற அந்த 79 வயது முதியவர், தனது மனைவியுடன் சில தினங்களுக்கு முன் புதுவையில் உறவினர்களைப் பார்க்க வந்திருந்தார். சனிக்கிழமை இரவு இருவரும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டதாகவும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தங்கப்பன் ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமான நிலைய மருத்துவர்கள் தங்கப்பன் ராமச்சந்திரனை பரிசோதித்தனர். எனினும், அவர் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
விமானம் புறப்பட்டதும் மாரடைப்பு: சிங்கப்பூர் முதியவர் மரணம்
1 mins read

