ஆசையாய் வாங்கிய புது வீடு: பார்க்கச் சென்ற குடும்பத்தில் 8 பேர் விபத்தில் பலி

ஆசையாய் வாங்கிய புது வீடு: பார்க்கச் சென்ற குடும்பத்தில் 8 பேர் விபத்தில் பலி

1 mins read

திருச்சி: சமயபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந் தைகள் உட்பட 8 பேர் பலியாகி னர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த பால முருகன், முசிறி அருகே உள்ள பேட்டவாய்த்தலைப் பகுதியில் அண்மையில் புது வீடு ஒன்று வாங்கியிருந்தார். சென்னையில் இருந்து வந்து அவ்வப்போது புது வீட்டில் தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தமது குடும்பத் தாரும் புது வீட்டைப் பார்க்க ஆசைப்படுவர் என்பதால் நேற்று முன்தினம் 13 பேருடன் தனது காரில் திருச்சிக்குப் புறப்பட்டார் பாலமுருகன். அதிகாலை சுமார் 4 மணியளவில் சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியை அவரது கார் நெருங்கியது. அச்சமயம் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலமுருகன் பயணம் செய்த கார் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இக்கோர விபத்தில் கார் தூள் தூளாக நொறுங்கியது. இதில் பாலமுருகன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தனர். இவர்களில் கந்தசாமி, நிவேதா ஆகிய இரு குழந்தைக ளும் அடங்குவர். படுகாயமடைந்த 5 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.