இடைத்தேர்தலில் களமிறங்க தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்

இடைத்தேர்தலில் களமிறங்க தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்

1 mins read

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜய்காந்த் மதுரையைச் சேர்ந்தவர். எனவே, மதுரையை மையமாக வைத்து தேமுதிகவுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட கணிசமான வாக்குகளைப் பெற்று பலத்தை நிரூபித்தால்தான் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் அறுவடை செய்ய முடியும் என விஜயகாந்திடம் நிர்வாகிகள் சிலர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.