ரூ. 4.24 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

ரூ. 4.24 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 4.24 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து கப்பல் மூலம் சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த கப்பலில் வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டுள்ளதாக அதிகாரிக ளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்துக் கப்பலை அவர்கள் சோதனையிட்டபோது மூன்று கொள்கலன்களில் 30.24 லட்சம் சிகரெட்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நான்கு பேர் கைதாகியுள்ளனர்.