நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்த ஆடவர் ஒருவர் அரிவா ளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டு பலரும் பதற்றமடைந்தனர். இது குறித்து வழக்கறிஞர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து ஆடவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக அனை வரும் ஆயத்தமாகிக் கொண் டிருந்தனர். வழக்கறிஞர்களும் தங்களது மேசைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அரிவாளுடன் வந்த நபர் ஒருவர், நேரே சென்று நீதிபதி இருக்கை யில் அமர்ந்தார்.
இதைக் கண்டு வழக்கறிஞர்கள் அதிர்ந்தனர். விசாரணையில் ஆடவர் தனது பெயர் முனியசாமி என்றும் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முனியசாமி பிறகு பிணை பெற்றார். மேலும் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகாததால் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை முன்னிலைப் படுத்தினர். அப்போது முனியசாமி வாராவாரம் குற்றவியல் நீதி மன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

