புதுடெல்லி: தமிழகத்தில் காவிரி கடற்படுகை யின் இரு இடங் களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. இத னால் இனி எந்தப் பிரச்சினையும் வர வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தர்மேந்திர பிரதான் முன்னி லையில் இந்த ஒப்பந்தம் கையெ ழுத்தானது. தர்மேந்திர பிரதான் செய்தி யாளர்களிடம் கூறியபோது, "தமிழகத்தில் காவிரி டெல்டா படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத் துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளிக் கப்பட்டு உள்ளது. "ஹைட்ரோ கார்பன் திட் டத்தை செயல்படுத்த விவ சாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். இதனால் இனி எந்த ஒரு பிரச்சினையும் வராது," என்று தெரிவித்தார். வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் டெல்லியில் பேட்டி அளித்தார். "ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள் ளது," எனக் கூறினார்.

