பேராசிரியரை அரிவாளால் தாக்கிய கணவர் பலி

பேராசிரியரை அரிவாளால் தாக்கிய கணவர் பலி

2 mins read
3648c4ee-9801-4baa-82e3-a350146fbf04
-

அஞ்சுகிராமம்: குடும்பத் தகராறு காரணமாக அண்மையில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தனது மனைவியை வெட்டித் தாக்கிவிட்டு, தப்பி ஓடி தலை மறைவான வழக்கறிஞரை போலி சார் தேடி வந்தனர். அவர் கர்நாட காவில் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை விட்டதாக நேற்று தகவல் தெரியவந்தது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தைச் சேர்ந்த வர் டால்டன் செல்வ எட்வர்ட், 40, வழக்கறிஞர். இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி, 33. அரசு கல்லூரிப் பேராசிரியை. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட இந்த தகராறின் போது கடும் கோபம் அடைந்த எட்வர்ட், மனைவி என்றும் பாராமல் ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக அரிவா ளால் வெட்டித் தாக்கினார்.

இதில் உயிருக்குப் போராடிய ஜெகதீஷ் ஷைனியை அக்கம்பக்கத் தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து எட்வர்ட் அரிவாளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பித்தார். அவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மண்டியா அருகில் உள்ள எலியூர் பகுதி ரயில் தண்டவாளத்தில் ஒரு உடல் கிடந்தது. ஆடவர் அணிந்திருந்த சட்டை பையைப் போலிசார் சோதித்தபோது, அதில் பார் மன்ற அடையாள அட்டை இருந்தது. மனைவியை வெட்டிய எட்வர்ட் போலிசுக்குப் பயந்து கர்நாடகா வந்து ரயில் முன் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கணவர் அரிவாளால் தாக்கியதில் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடும் ஜெகதீஷ் ஷைனி, உயிரிழந்த டால்டன் செல்வ எட்வர்ட். படம்: ஊடகம்