சென்னை: அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர் தலுக்கு இப்பொழுது முதலே முழுமூச்சுடன் ஈடுபட்டு வெற்றியை தன் பக்கம் வளைப்பதற்கு தமி ழகத்தின் பிரதான எதிர்க்கட்சி யான திமுக வியூகம் வகுத்து வருகிறது. இந்த வியூகத்தின் முதல் கட்டமாக மக்களின் தேவைகள் என்ன? அவற்றை பூர்த்தி செய்யும் முறைகள் குறித்து மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் கருத்துகளைத் திரட்டி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள தேசிய, மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகளும் மறைமுகமாகத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், முன்னாள் மேயரும் தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறும்போது, "மக்களவைத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடக்கவுள்ளது. "எனவே, கட்சி நிர்வாகிளை வாரந்தோறும் சந்தித்து ஆலோ சனை நடத்தி வருகிறோம். வாக் காளர் பட்டியலில் பெயர் சரி பார்த்தல், விடுபட்ட பெயர்களைச் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மக்களவைத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ள திமுக, நகரங்கள், கிராமங்களில் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்கும் பணியையும் தொடங்கி யுள்ளது. மக்களின் தேவைகள் குறித்து அவர்களிடம் நேரடியாக விவரம் கேட்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம்

