கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர் வாரிய புதுச்சேரி முதல்வர்

கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர் வாரிய புதுச்சேரி முதல்வர்

1 mins read
310286ef-7189-45c2-84c3-b9f98835ad7e
-
Google News Preferred Icon

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது தொகுதியான நெல்லித் தோப்பிலுள்ள சாரம் பகுதியில் அமைந்துள்ள சின்ன மார்க்கெட்டில் தூய்மைப் பணியை ஆய்வு செய்தார். இப்பகுதியில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்த ஊழியர்களிடம் மண்வெட்டியை வாங்கி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கழிவு நீர் கால்வாயில் இறங்கி அதில் அடைத்துக்கொண்டிருந்த கழிவுகளை தூர் வாரும் பணியை மேற்கொள்கிறார். புதுச்சேரியில் கடந்த ஒருவார காலமாக 'தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். படம்: ஊடகம்