நீதிபதி மனைவிக்கு பார்சல் அனுப்ப முயன்ற எழுவர் கைது

நீதிபதி மனைவிக்கு பார்சல் அனுப்ப முயன்ற எழுவர் கைது

1 mins read

விழுப்புரம்: உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா, மல்லிகை பூ பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட எழுவரை காவல்துறை யினர் கைது செய்தனர். ஆண், பெண் உறவு பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் விழுப் புரம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திரண்டு தீபக்மிஸ்ராவின் மனைவிக்கு டெல்லியில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்பு வதற்காக அல்வா, மல்லிகைப் பூ ஆகியவற்றைப் பார்சல் செய்தனர். பின்னர் அவற்றை அனுப்ப அஞ்சல் நிலையத்துக்குள் சென் றனர். இதை அறிந்த விழுப்புரம் நகர காவல்துறையினர் அவர் களைக் கைது செய்தனர்.